சினிமா
காலேஜ் படிக்கும் போது 70 சிகரெட்.. இயக்குநர் ஆனதும் 150 சிகரெட்.. வெற்றிமாறன் பேச்சு!
Published
4 weeks agoon
By
Saranya
இயக்குநர் வெற்றிமாறன் கல்லூரி படிக்கும் போது சிகரெட் பழக்கத்தை ஆரம்பித்தேன். அதன் பிறகு அது மிகப்பெரிய அளவில் என்னை கெடுத்து விட்டது என போதை மற்றும் புகையிலை தடுப்பு தொடர்பான குறும்பட போட்டியில் பேசிய பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் வெற்றிமாறன். நடிகர் தனுஷ் உடன் இணைந்து ஒரே ஒரு பல்சர் பைக்கை வைத்து உருவாக்கப்பட்ட அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அதனை தொடர்ந்து, அதே போல சேவல் பந்தயத்தை கையில் எடுத்து மீண்டும் தனுஷ் உடன் இணைந்து ஆடுகளம் படத்தை இயக்கி தேசிய விருது இயக்குநராக மாறினார்.
விசாரணை, வடசென்னை, அசுரன் என வெற்றிமாறன் இயக்கிய அனைத்து படங்களும் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தியது. அடுத்து சூரி, விஜய்சேதுபதி நடிப்பில் அவர் இயக்கி உள்ள விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.
இந்நிலையில், குறும்பட போட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன் காலேஜ் படிக்கும் போது ஒரு நாளைக்கு தான் 70 சிகரெட் பிடித்ததாகவும், இயக்குநராக மாறியதும் அது 150 ஆக மாறியது என்றும் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் அதெல்லாம் கெத்தா இருந்துச்சு, அதன் பிறகு ஓடி ஆடி கூட வேலை செய்யாமல் என்னை உருக்குலைத்து விட்டது. அதன் பின்னர் சிகரெட் பிடிப்பதையே விட்டு விட்டேன். புகைப்பழக்கமும், போதைப் பழக்கமும் இளைஞர்களை கெடுத்து விடும் என பேசி உள்ளார்.
You may like
-
ஆட்டநாயகன் விஜய் சதம் அடித்தாரா? சறுக்கினாரா? எப்படி இருக்கு வாரிசு திரைப்படம்!
-
தாய்லாந்தில் தாராளம் காட்டிய கீர்த்தி சுரேஷ்; டாப் ஹீரோக்களுடன் மீண்டும் ஜோடி சேர திட்டமா!
-
விடுதலை படத்துக்கு ஒரு வழியா விடுதலை கொடுத்த வெற்றிமாறன்; 2 பார்ட் ஷூட்டிங்கும் ஓவராம்!
-
அப்போ செல்வராகவன் போட்ட பதிவு கன்ஃபார்ம் தானா? கீதாஞ்சலி இப்படியொரு போஸ்ட் போட்டுருக்காரே!
-
சிகரெட்டுக்களை இனி கடையில் வாங்க முடியாதா? மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!
-
வெற்றிமாறனின் ‘விடுதலை’ படப்பிடிப்பில் விபத்து.. பலியான பிரபலம் இவரா?