இந்தியா
சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்கலாமா?.. நாளை தீர்ப்பு

டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரிய வழக்கில் நாளை உச்ச நீதிமன்ற தீர்ப்பளிக்க இருக்கிறது.
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். பெண்களிலும், 10 வயதிற்கும் குறைவான சிறுமிகளும், 50 வயதிற்கும் அதிகமான பெண்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரிய வழக்கில் நாளை உச்ச நீதிமன்ற தீர்ப்பளிக்க இருக்கிறது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளிக்க இருக்கிறது. நாளை காலை 11 மணிக்கு தீர்ப்பளிக்க வாய்ப்புள்ளது.


















