இந்தியா
சென்னையில் உள்ள 5 இடங்களில் சிபிஐ திடீர் சோதனை

சென்னை: சென்னையில் உள்ள 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி இருக்கிறார்கள்.
எஸ்எல்ஓ இன்டஸ்ட்ரீஸ், ஆரன் ஸ்டீல்ஸ் ஆகிய தனியார் நிறுவனங்கள் கார்ப்பரேஷன் வங்கிகளில் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றிவிட்டதாக புகார் உள்ளது.

கார்ப்பரேஷன் வங்கியில் 201 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சிபிஐ இந்த நிறுவனங்களின் மீது வழக்கு பதிந்துள்ளது.
கடன் பெற்று திருப்பி தராத வழக்கில் சோதனை நடக்கிறது.சென்னையில் உள்ள 5 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
எஸ்எல்ஓ இன்டஸ்ட்ரீஸ், ஆரன் ஸ்டீல்ஸ் ஆகிய நிறுவன கிளைகளில் சோதனை நடக்கிறது.
















