Connect with us

சினிமா செய்திகள்

பாலிவுட் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம்: சமந்தாவின் சம்பளம் ரூ.5 கோடியா?

Published

on

சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படத்தில் சமந்தா ஒரு குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடினார் என்பதும் அந்த பாடலுக்கு நடனமாட அவருக்கு சம்பளமாக ரூ 3 கோடி பெற்றதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் பாலிவுட் திரைப்படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாட இருப்பதாகவும் அந்த பாடலுக்கு சமந்தா ரூ.5 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவான ’வீரம்’ படத்தின் இந்தி ரீமேக் தற்போது தயாராகி வருகிறது. அஜித் வேடத்தில் சல்மான் கான், தமன்னா வேடத்தில் பூஜா ஹெக்டே நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில்தான் ஒரு குத்தாட்டம் ஆட சமந்தா ஒப்புக்கொண்டிருப்பதாகவும், இதற்காக அவருக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
How to handle emergency roof leak repair before it gets worse commercial & residential roof contractor clark roofing.