Connect with us

செய்திகள்

Ration Card Update: தாயுமானவர் திட்டத்தில் ஜனவரி 2026 ரேஷன் பொருள் விநியோகம் – தேதி அறிவிப்பு!

Published

on

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜனவரி 2026 மாதத்துக்கான ரேஷன் பொருள் விநியோகம் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் மூலம், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில் ஜனவரி மாதத்துக்கான வீடு தேடி ரேஷன் விநியோக தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

அதன்படி, ஜனவரி 4 மற்றும் 5, 2026 ஆகிய தேதிகளில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயதுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், பயனாளிகள் கைவிரல் ரேகை பதிவு செய்து ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். ஒருவேளை கைவிரல் ரேகை பதிவு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டால், கையெழுத்து மூலமாகவும் பொருட்களை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், திருவாரூர் மாவட்டத்தைப் போலவே, மற்ற மாவட்டங்களிலும் ஜனவரி மாதத்தில் எந்த தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்பது குறித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளனர்.

இந்த தாயுமானவர் திட்டத்தில்,

  • 65 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள்

  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள்

பயனாளிகளாக சேர முடியும். தகுதியுடையவர்கள் தங்களின் தாலுகா அலுவலகங்களில் நடைபெறும் பொதுவிநியோக திட்ட குறைதீர்ப்பு முகாம்கள் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வாரந்தோறும் நடைபெறும் குறைதீர்ப்பு முகாம்களில் மனு அளித்து இத்திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம்.

அதிகாரிகள் மனுக்களை பரிசீலித்து, அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்பவர்களை தாயுமானவர் திட்டத்தில் பயனாளிகளாக இணைப்பார்கள். தகுதியானவர்கள் இந்த அரசுத் திட்டத்தை பயன்படுத்தி முழுமையாக பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியா6 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா12 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 30.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized1 நாள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

Translate »
submit your blog post.