செய்திகள்
Pongal Gift 2026: பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அரசாணை வெளியீடு – ரொக்க வழங்கல் குறித்த எதிர்பார்ப்பு அதிகரிப்பு!
Published
10 மாதங்கள் agoon
By
Poovizhi
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான முக்கிய அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த கொண்டாட்டத்தை மேலும் சிறப்பாக்கும் வகையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளில் அத்தியாவசிய பொருட்களுடன் சேர்த்து ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டதால், இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் பணம் வழங்கப்படுமா? எவ்வளவு வழங்கப்படும்? எப்போது விநியோகம் தொடங்கும்? என்ற கேள்விகள் பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஆட்சியில் 2021ஆம் ஆண்டு, பொங்கல் பரிசுடன் ரூ.2500 ரொக்கமாக வழங்கப்பட்டது. இது இதுவரை வழங்கப்பட்ட மிக அதிகபட்ச ரொக்க உதவியாகும். அதன் பின்னர், திமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், 2026ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புக்காக ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, பொங்கல் பரிசு தொகுப்பில்
1 கிலோ பச்சரிசி,
1 கிலோ சர்க்கரை,
1 கரும்பு
ஆகியவை இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, இந்த முறை பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க உதவியும் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்த ரொக்க உதவி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

2026 பொங்கல் பரிசு தொகுப்பு: புதுச்சேரி ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, பொருட்கள் மற்றும் ரூ.1000 வரை பண உதவி – அரசு ஊழியர்களுக்கு இல்லை!

பொங்கல் பரிசுத் தொகுப்பு 2026: யாருக்கு கிடைக்கும்? யாருக்கு கிடைக்காது? ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முழு விவரம்!

பொங்கல் பரிசு 2026: தை மாதத்தில் யாருக்கு ரூ.4000 கிடைக்கும்? முழு விவரம்!

பொங்கல் பரிசு 2026: ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

பொங்கல் பரிசில் மண்பாண்டம் சேர்க்க வேண்டும் – தமிழக மண்பாண்ட தொழிலாளர் சங்கம் கோரிக்கை!




