சினிமா செய்திகள்
அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தள்ளிப்போகிறது..!

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.
பல்வேறு முன்னணி நடிகர்களின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டாலும் ரஜினிகாந்த்தின் படப்பிடிப்பு மட்டும் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.
ரஜினிகாந்த் வயது மற்றும் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு ரஜினிகாந்த் எப்போது வந்தாலும், அதுவரை காத்திருக்கிறோம் என்று சன் பிக்சர்ஸ் தெரிவித்தது.
அண்மையில், ரஜினிகாந்த் படப்பிடிப்பு வர ஒப்புக்கொண்டதை அடுத்து, டிசம்பர் மாதம் 15-ம் தேதி முதல் அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. ஆனால் சிறுத்தை சிவாவின் அப்பா சென்ற வாரம் இறந்ததால் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு தள்ளிப்போகிறது.
ஆனால் பொங்கலுக்கு முன்பு அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடந்தா அண்ணாத்த கோடை விடுமுறைக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.






