Connect with us

சினிமா செய்திகள்

நெல்சன் தான் இயக்குனர்: அனிருத்திடம் உறுதி சொன்ன ரஜினிகாந்த்

Published

on

விஜய் நடித்த ’பீஸ்ட்’ படம் படுதோல்வியை சந்தித்துள்ளதை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 169’ படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் நெல்சன் தான் எனது அடுத்த படத்தின் டைரக்டர் என்றும் அவரை பட வேலைகளை ஆரம்பிக்க சொல் என்று அனிருத்திடம் ரஜினிகாந்த் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சினிமாவை பொறுத்தவரை ஒரு தோல்வி படம் கொடுத்துவிட்டால் அந்த இயக்குனரை நடிகர்கள் கண்டுகொள்வதே இல்லை. ஆனால் ’பீஸ்ட்’ திரைப்படம் தோல்விக்கு முழுக்க முழுக்க நெல்சன் காரணமில்லை என்பதை ரஜினிகாந்த் புரிந்து கொண்டதாக தெரிகிறது.

எனவே ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி ‘ தலைவர் 169’ படத்தை நெல்சன் தான் இயக்குவார் என்றும் அவரிடம் பட வேலைகளை ஆரம்பிக்க சொல் தனது உறவினரான இசையமைப்பாளர் அனிருத்திடம் ரஜினிகாந்த் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது .

ரஜினிகாந்த் தன் மீது நம்பிக்கை வைத்துள்ளதை அடுத்து அவரது படத்தை வெற்றிப் படமாக்க வேண்டும் என முடிவு செய்துள்ள நெல்சன் தற்போது தீவிரமாக ஸ்கிரிப்ட் பணியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ’பீஸ்ட்’ படத்தின் தோல்விக்கு நெல்சனே காரணம் என திரையுலகம் குற்றம்சாட்டி வரும் நிலையில் ரஜினிகாந்த் அவர் மீது மீண்டும் நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Dr68 seo power :.