சினிமா செய்திகள்
நிரூப்பை ஜெயிலுக்கு அனுப்பிய பிரியங்கா; உடைந்தது நட்புக்கூட்டணி!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 60 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் முதல் நாளில் இருந்தே பிரியங்கா, நிருப் மற்றும் அபிஷேக் ஆகிய மூவரும் நட்புடன் இருந்தார்கள் என்பதும் அபிஷேக் வெளியேற்றப்பட்ட போது பெரும் வருத்தம் அடைந்தது பிரியங்காவும் நிரூப்பும் தான் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் அனைத்து டாஸ்க்கிலும் நிருப் மற்றும் பிரியங்கா ஆகிய இருவருமே கூட்டணி அமைத்து விளையாடி வந்த நிலையில் தற்போது திடீரென பிரேக்கிங் நியூஸ் டாஸ்க்கில் பிரியங்கா மற்றும் நிருப் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
ப்ரியங்கா மற்றும் அபிஷேக் ஆகிய இருவரும் நிருப்-ஐ இந்த டாஸ்க்கின்போது கலாய்த்த நிலையில் நிருப் ஆத்திரமடைந்து இருவரும் மீது கோபப்படும் காட்சிகள் இன்றைய ப்ரோமோ வீடியோக்களில் உள்ளன. மேலும் இந்த டாஸ்க்கில் மோசமாக விளையாடியவர் யாரென்று பிக்பாஸ் தேர்வு செய்ய கூறும்போது பிரியங்கா, அபிஷேக் உள்பட அனைவருமே நிருப்பை தேர்வு செய்து அவரை சிறைக்கு அனுப்பி உள்ளனர்.
இதுவும் நிருப்பிற்கு ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. கடந்த 60 நாட்களாக நிருப் மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும் ஒன்றாக, நட்பாக இருந்த நிலையில் இனிவரும் நாட்களும் நாட்களில் இருவரும் எதிர் எதிராக விளையாடும் வாய்ப்பு இருப்பதால் இனி நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விஷயத்தில் பிரியங்கா தனது இமேஜை அதிகமாகக் கெடுத்துக் கொண்டார் என்றும் ஏற்கனவே தாமரை விஷயத்தில் அவர் செய்தது ஓவர் என்று அனைவரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது நிருப்பையும் அவர் பகைத்து கொண்டார் என்றும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
#Day61 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/pL5jIiGRoD
— Vijay Television (@vijaytelevision) December 3, 2021
#Day61 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/6IqyG8mG9k
— Vijay Television (@vijaytelevision) December 3, 2021





















