சினிமா செய்திகள்
அரசியலுக்கு வர ஓவியா திட்டம்?

களவாணி 2 படத்தில் மகளிர் சுய உதவிக் குழுவின் தலைவியாக ஓவியா நடித்துள்ளார். இந்நிலையில், அரசியலுக்கு வரும் ஐடியா எதிர்காலத்தில் தோன்றினால், கட்டாயம் வருவேன் எனக் கூறியுள்ளார்.
சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடித்துள்ள களவாணி 2 படம் பல தடைகளை தாண்டி ரிலீசாகி சுமாராக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த படத்தில் மகளிர் சுய உதவிக் குழுவின் தலைவியாக நடித்துள்ளீர்களே.. இது அரசியல் என்ட்ரிக்கான அடித்தளமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது?
அதற்கு பதிலளித்த ஓவியா, சினிமாவை அரசியல் வருவதற்கான பயிற்சி மையம்னு நினைச்சிட்டுருக்கீங்களா? தமிழ்நாட்டுல மட்டும்தான் இந்த நிலைமை இருக்கு. சினிமாவுல பிரபலாமான அரசியலுக்கு வந்துடலாம்னு, ஆனா, அரசியலுக்கு வரணும்னா உண்மையா மக்களுக்காக பாடுபட்டா மட்டும் தான் வர முடியும். நான் என்னோட ஓவியா ஆர்மிய தேவையில்லாம யூஸ் பண்ண விரும்பல.. எதிர்காலத்துல அரசியலுக்கு வர ஐடியா இருந்தா அதற்கான முக்கியமான வேலைகளை பார்த்துட்டுத் தான் வருவேன் எனக் கூறியுள்ளார்.
மேலும், தனது சொந்த மாநிலமான கேரளாவில் இல்லாமல், தமிழ்நாட்டில் தான் அரசியல் செய்வேன், தமிழ்நாட்டில் தான் தனக்கு ரசிகர்கள் ஏராளம் எனக் கூறியுள்ளார் ஓவியா.




















