சினிமா செய்திகள்
பயில்வான் ரங்கநாதனுக்கு பதிலடி கொடுத்த ஓவியா, சின்மயி!

நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை உள்பட பல விஷயங்களை தனது யூடியூப் சேனல் மூலமும், பேட்டிகள் மூலமும் கூறிவரும் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதனுக்கு நடிகை ஓவியா மற்றும் பாடகி சின்மயி பதிலடி கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனலில் டார்ச்சர் செய்ததால் சினிமாவை விட்டு ஓடிய நடிகைகள்’ என்ற தலைப்பில் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவில் அவர் சதா, சந்தியா, அபிராமி, சுனைனா, பூஜா, சோனியாஅகர்வால், ஓவியா உள்பட ஒரு சில நடிகைகள் ஏன் தங்கள் மார்க்கெட்டை இழந்தார்கள் என்பது குறித்து அவர் கூறியிருந்தார்.
இந்த தகவல்கள் அனைத்தும் உண்மையானது என்றும் அவர் தெரிவித்திருந்த நிலையில் இந்த வீடியோவுக்கு மிகப்பெரிய அளவில் பார்வையாளர்கள் குவிந்தனர். மேலும் அவர் தனது வீடியோவில் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை, அந்தரங்கங்கள், பழக்கவழக்கங்கள், உடல் அமைப்பு ஆகியவை குறித்தும் பேசியுள்ளார்.
இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதனின் இந்த வீடியோவுக்கு நடிகை ஓவியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுவும் ஒரு வகை பாலியல் அல்லாத சீண்டல் தான் என்று அவர் தெரிவித்து Women’s Rights என்ற ஹேஷ்டேக்கையும் பதிவு செய்துள்ளார். ஓவியாவின் இந்த கண்டனத்திற்கு ஆதரவாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாடகி சின்மயி ஓவியாவின் வீடியோவுக்கு கமெண்ட்ஸ் செய்துள்ளார். அவர், ‘இந்த மனிதர் எப்போதுமே இப்படித்தான், இவரைப் போன்ற குணமுடைய சில ஆடியன்ஸ்கள் இருக்கும் வரை இவருக்கு வேலை உண்டு’ என்று தெரிவித்துள்ளார்.
This is what non sexual women harassment!#WomensRights !
டார்ச்சர் செய்ததால் சினிமாவை விட்டு ஓடிய நடிகைகள் | Bayilvan Ranganathan… https://t.co/nyoBlA1UAq via @YouTube— Oviyaa (@OviyaaSweetz) September 14, 2021


















