இந்தியா
திருச்சி டூ நியு ஜலப்பைக்குரி புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை 17ம் தேதி தொடங்குகிறது

திருச்சியிலிருந்து புதிதாக துவங்கப்பட இருக்கும் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பல முக்கிய நகரங்களை இணைக்க உள்ளது
பல்வேறு ஆன்மீக தலங்கள் சுற்றுலா தளங்கள் என அனைத்திற்கும் இந்த ரயில் மூலமாக நாம் பயணிக்க முடியும் 💥
🟢 தமிழ்நாடு —->>> மேற்கு வங்கம் 🔵
🟠 சென்னை எழும்பூர்
🟠 விஜயவாடா
🟠 விசாகப்பட்டினம்
🟠 குருதா ரோடு ( FOR பூரி )
🟠 புவனேஸ்வர்
🟠 கரக்பூர்
🟠 அந்துல் / டான்குனி ( For கொல்கத்தா )
🟠 மால்டா டவுன்
🟠 நியூ ஜல்பைகுரி ( For டார்ஜிலிங் )
என பல முக்கிய நகரங்களை இந்த அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இணைக்க உள்ளது 🔥
வடகிழக்கு மாநிலங்கள் செல்வதற்கான ஒரு வாய்ப்பு இந்த ரயிலில் கிடைக்கிறது // அதுமட்டுமில்லாமல் புகழ்பெற்ற டார்ஜிலிங் சுற்றுலா தளத்தில் உள்ள TOY TRAIN மூலமாக பயணிப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கிறது
* கொல்கத்தாவின் அந்துல் டான்குனி ஆகிய நிலையங்கள் வழியாக இந்த ரயில் செல்கிறது !! நமது தமிழ்நாட்டில் எப்படி பெரம்பூர் போன்ற நிலையங்கள் உள்ளதோ அதுபோன்று தான் இந்த நிலையங்களும் !! இங்கிருந்து அடிக்கடி புறநகர் ரயில் சேவை ஹவுரா வரை உள்ளது !! அதனை பயன்படுத்தி கொல்கத்தாவிற்கு உள்ளே செல்ல முடியும் !!
* பூரி ஜெகநாதரை தரிசிக்க🛕 குருதா ரோடு ரயில் நிலையத்தில் இந்த ரயிலை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும் !! இதுவரை தஞ்சாவூர் வழியாக இராமேஸ்வரம் புவனேஸ்வர் ரயில் மட்டுமே பூரியை இணைத்து வந்தது // இப்போது கூடுதலாக இந்த ஒரு இணைப்பும் கிடைத்துள்ளது !!
ஆந்திராவின் பல முக்கிய நகரங்களான விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் இந்த ரயில் சென்று வருகிறது !! அங்கு சொல்பவர்களுக்கும் இந்த ரயில் மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும்
இந்த அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பொருத்த வரை முழுவதும் ஏசி பெட்டி இல்லாத ஒரு ரயிலாகும் !! 11 UNRESERVED / 8 SLEEPER / 2 SLR-D / 1 PANTRY / 2= WAP-5 எஞ்சின் உடன் இந்த ரயில் இயங்கும் !! இதனால் நடுத்தர மக்களும் இந்த ரயிலை பயன்படுத்த முடியும் !!
குறிப்பாக இந்த அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு PUSH-PULL வகையிலான ரயிலாகும்
வரும் ஜனவரி 17 முதல் இந்த ரயில் தனது பயணத்தை துவங்க உள்ளது
திருச்சியில் இருந்து புதன்கிழமைகளில் புறப்பட்டு வெள்ளிக்கிழமைகளில் நியூ ஜலப்பைகுறி சென்று சேரும் !!
மீண்டும் நியூ ஜல்பைகுறியில் இருந்து வெள்ளி புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை திருச்சிராப்பள்ளி வந்து சேரும் !!
திருச்சியிலிருந்து தஞ்சாவூர் கும்பகோணம் மயிலாடுதுறை சிதம்பரம் திருப்பாதிரிப்புலியூர் விழுப்புரம் செங்கல்பட்டு தாம்பரம் சென்னை எழும்பூர் கூடூர் விஜயவாடா விசாகப்பட்டினம் விஜயநகரம் குருதா ரோடு புவனேஸ்வர் பாலசோர் கரக்பூர் அந்துல் டான்குனி ( கொல்கத்தா ) மால்டா வழியாக நியூ ஜல்பைகுரி வரை செல்லும் 💢
துவக்க விழா சேவை இந்த வாரத்தில் நடைபெற உள்ளது // பொதுமக்களுக்கான சேவை தொடர்பான தகவல் மிக விரைவில் வெளியாகும் !! அப்போது இந்த அம்ரித் பாரத் ரயில்களுக்கான முன்பதிவும் துவங்கும் ➡️













