சினிமா
தளபதி 63ல் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்!

வில்லு படத்திற்கு பிறகு தளபதி 63ல் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்க கமீட் ஆகியுள்ளார்.

கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் உருவாகவுள்ள விஜயின் தளபதி 63 படத்தை தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லி இயக்குகிறார்.
இந்த படத்தில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில், படத்தில் பணிபுரிபவர்கள் பட்டியலை அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டார். ஆனால், அதில் நாயகி பெயர் இடம்பெறவில்லை.
இந்நிலையில், தளபதி 63ல் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார் என்பதை நேற்று அதிகாரப்பூர்வமாக அர்ச்சனா கல்பாத்தி அறிவித்தார்.
தலயின் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ள நயன்தாரா அடுத்து தளபதியின் 63வது படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவுக்கு வெயிட்டான கதாபாத்திரம் என படக்குழு தெரிவித்துள்ளது.
















