சினிமா செய்திகள்
பிக்பாஸ்: முதல் வாரமே வெளியேறிய முக்கிய போட்டியாளர், அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 ஆரம்பித்து ஒரு வாரம் கூட இன்னும் முடிவடையாத நிலையில் முக்கிய போட்டியாளர் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று 18 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கியது என்பதும் கமல்ஹாசன் முன் அனைவரும் அறிமுகம் ஆனார்கள் என்பதும் தெரிந்ததே.
கடந்த 5 நாட்களாக போட்டியாளர்களுக்குள் சின்ன சின்ன சண்டைகள் வந்தாலும் பெரும்பாலும் உற்சாகமாக இருந்தனர் என்பதும் பிக்பாஸ் வீடே கலகலப்பாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
#BiggBossTamil இல் இன்று.. #Day6 #Promo 1 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/fRzQ8Tg6H1
— Vijay Television (@vijaytelevision) October 9, 2021
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து ஆறு நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான நமீதா மாரிமுத்து அவராகவே வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு ஒன்றை பிக்பாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தொடர்ந்து அப்டேட் செய்து வரும் டுவிட்டர் பயனாளி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரமோ வீடியோவில் நமீதா மாரிமுத்து தவிர அனைவரும் உட்கார்ந்து இருப்பதை பார்க்கும் போது இந்த தகவல் உண்மையானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. நமிதா மாரிமுத்து திடீரென ஏன் வெளியேறினார் என்ன காரணம் என்பது குறித்து இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Bigg Boss voice :
Sila thavirka mudiadha kaaranathinal #NamithaMarimuthu avaragave veliyerinaar#biggbosstamil #Biggbosstamil5— Imadh (@MSimath) October 9, 2021
























