சினிமா
‘நாட்டு நாட்டு’ மூலம் ராம்சரணுக்கு வரவேற்பு கொடுத்த பிரபுதேவா!

நடன இயக்குந்அரும் நடிகருமான பிரபுதேவா ‘நாட்டு நாட்டு’ பாடல் மூலம் ராம் சரணுக்கு வரவேற்பு கொடுத்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சமீபத்தில் 95வது ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெற்றது. இதில், ‘RRR’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இதனை அடுத்து ‘RRR’ படக்குழு ஹைதராபாத் வந்த பொழுது ரசிகர்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் சமூக வலைத்தளங்களிலும் திரைத்துறையை சார்ந்தவர்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் ராம்சரண் தற்பொழுது ஷங்கர் இயக்கத்தில் ‘ஆர்சி 15’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கு ‘சிஇஓ’ எனத் தலைப்பிட போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இந்த படத்திற்காக பாடல் ஒன்று படமாக்கப்பட உள்ள நிலையில் இந்த பாடலை நடன இயக்குநர்கள் பிரபுதேவா மற்றும் கணேஷ் ஆகியோர் நடனம் அமைத்து வருகிறார்கள்.
இந்த பாடலின் ஒத்திகைக்காக ராம்சரண் வந்த பொழுது அவருக்கு வரவேற்பு கொடுக்கும் விதமாக பிரபுதேவா மற்றும் அவரது நடனக்குழு ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடி அவருக்கு வரவேற்பு கொடுத்துள்ளனர். இந்த வீடியோவை பிரபுதேவா தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த உற்சாக வீடியோ தற்பொழுது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
NAATU NAATU ❤️❤️❤️❤️❤️to the TEAM 🙏 pic.twitter.com/g58cQlubCp
— Prabhudheva (@PDdancing) March 18, 2023