சினிமா செய்திகள்
சீமானை சீண்டுகிறதா விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’?- நேரில் சென்று விளக்கிய நடிகர் பார்த்திபன்

நடிகர் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் திரைப்படம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சீண்டுவதாக உள்ளது என நாம் தமிழர் கட்சியினர் விஜய் சேதுபதிக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஜய் சேதுபதி இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரணின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதாக போஸ்டர் வெளியானது. அதற்கு விஜய் சேதுபதிக்கு எதிராக முதலில் கண்டனம் தெரிவித்தவர் நாம் தமிழர் கட்சியின் சீமான். அதன் பின்னர் தமிழகம் எங்கும் எழுந்த எதிர்ப்பு அலையால் முத்தையா முரளிஉதரணின் படத்தில் இருந்து வெளியேறுவதாக விஜய் சேதுபதி அறிவித்தார்.
அபோது இருந்தே விஜய் சேதுபதி ரசிகர்களுக்கும் நாம் தமிழர் தொண்டர்களுக்கும் இடையே ஆன்லைனில் முட்டலும் மோதலுமாகவே இருந்து வந்தது. இந்த சூழலில் சமீபத்தில் வெளியான ‘துக்ளக் தர்பார்’ திரைப்படத்தின் டீசரில் வில்லந் வேடத்தில் நடிக்கும் பார்த்திபனுக்கு ‘ராசிமான்’ எனப் பெயர் வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதன் மூலம் சீமானா விஜய் சேதுபதி சீண்டுகிறார் என ஆன்லைனில் நாம் தமிழர் கட்சியினர் கொதிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்நிலையில் இது குறித்து நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நண்பர் சீமான் அவர்களிடம் நேரிடையாக’துக்ளக் தர்பார்’குறித்து விளக்கமளித்து விட்டேன்.அவரும் பெருந்தன்மையாக பதில் அளித்தார் ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டு மென்று வைக்கப்பட்டதல்ல. இருந்திருந்தால் அதற்கு நானே இடந்தந்திருக்க மாட்டேன்.இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல” எனக் குறிப்ட்டுள்ளார்
நண்பர் சீமான் அவர்களிடம் நேரிடையாக’துக்ளக் தர்பார்’குறித்து விளக்கமளித்து விட்டேன்.அவரும் பெருந்தன்மையாக பதில் அளித்தார் ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டு மென்று வைக்கப்பட்டதல்ல. இருந்திருந்தால் அதற்கு நானே இடந்தந்திருக்க மாட்டேன்.இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல>> pic.twitter.com/wNSqUmncIW
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 13, 2021


















