தமிழ்நாடு
நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் இதை செய்து காட்டுங்கள்… அண்ணாமலைக்கு சீமான் சவால்!

திமுகவினரின் ஊழல் மற்றும் சொத்து பட்டியலை சென்னை கமலாலயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ளார். இதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிமுக மீதான ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும் என அண்ணாமலைக்கு சவால் விடுத்துள்ளார்.

#image_title
மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், திமுகவினரின் சொத்துப்பட்டியல் வெளியிட்ட அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், அண்ணாமலையின் அறிவிப்பை நான் வரவேற்கிறேன். அதே நேரத்தில் இது ஒன்றும் புதிது அல்ல. திமுகவுக்கு எவ்வளவு சொத்து உள்ளது என அனைவருக்கும் தெரியும்.
அண்ணாமலை திமுக பட்டியலை வெளியிட்டதால் அதிமுகவில் இருப்பவர்கள் புனிதர்கள் ஆகிவிட முடியாது. கூட்டணி கட்சி என்பதால் வாயை மூடிக்கொண்டு அவர் அமைதியாக இருக்கக்கூடாது. நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், ஆட்சி செய்தவர்கள் மீதும் உள்ள சொத்து மற்றும் ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட வேண்டும். மேலும் ஊழல் செய்த கட்சிகளோடு இனி கூட்டணி கிடையாது என்ற அறிவிப்பையும் வெளியிட வேண்டும் என சீமான் தெரிவித்தார்.