Connect with us

செய்திகள்

தந்தை பெரியார் விவகாரம்: சீமான் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற உத்தரவு!

Published

on

தந்தை பெரியார் விவகாரம்: சீமான் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!
சென்னை உயர்நீதிமன்றம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எழுந்த புகார்களின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மதுரை கே.கே. நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், தந்தை பெரியாரை அவதூறாக பேசியதாக சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதி உத்தரவிடுகையில், “தந்தை பெரியாரை பற்றி சீமான் கூறிய கருத்துகள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கக்கூடியது. இதனால், அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். மேலும், நடவடிக்கையின் நிலை குறித்து ஜனவரி 20-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை அண்ணா நகர் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு வெளியானதையடுத்து, சீமான் கைதாவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் சீமான் மீது தற்போது 60க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. சமூகப் பார்வையில், அவருக்கு எதிராக பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவிக்கின்றனர். சிலர் போராட்டங்களில் ஈடுபட்டு, நடவடிக்கை தேவை என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Your first backlinks will appear within minutes — and your website gets cited on other sites at the same time..