Connect with us

உலகம்

அதிகரிக்கும் உயிர்ப்பலி எண்ணிக்கை… 2400 ஐ தாண்டியது. மியான்மரிலும், தாய்லாந்திலும் சக்தி சாய்ந்த நிலநடுக்கங்கள்

Published

on

மார்ச்28 ம் தேதி தென்கிழக்கு ஆசிய பகுதிகளான தாய்லாந்து, சீனா, இந்தியா, வியட்நாம், வங்கதேசம் ஆகிய நாடுகளின் சில பகுதிகளில்  நிலநடுக்கம் உணரப்பட்டது. இது சகாயிங் நகரின் வடமேற்கில் 10 முதல் 30 கி்மீ் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதன் பாதிப்பு மியான்மர் மற்றும் தாய்லாந்தில் மிக அதிகமாக உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.7 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பலமாக குலுங்கின. அடுக்கு மாடி கட்டிடங்கள் சீட்டுக் கட்டு போல் சரிந்து விழுந்தன.

2012 ருத்ரம் என்ற ஒரு திரைப்படத்தினை சில ஆண்டுகளுக்கு முன் நாமெல்லாம் பார்த்திருப்போம். அந்த திரைப்படத்தின் காட்சிகளை மிஞ்சுவது போல் இருந்ததாக இந்த நிலநடுக்க பாதிப்புகளை நேரில் பார்த்தவர்கள் சொல்லி வருகின்றனர். பாலங்கள் இடிந்து விழுந்ததும் சாலைகளின் நடுவே மிகப்பெரிய ஆழமான நீண்ட வெடிப்புகள் ஏற்பட்டு இந்த சாலைகளின் இரண்டு பக்கங்களிலும் இருந்த கட்டிடங்கள் 30 மாடி கட்டிடம் உட்பட சரிந்து விழுந்திருப்பதும் மிகவும் கோரமான காட்சிகளாக இருக்கின்றன.

நமது செய்தி பக்கத்தில் சில நாட்களுக்கு முன் ஜோதிட பக்கம் ஒன்றில் மார்ச்28ம் தேதி முதல் ஏப்ரல் 13 வரை உலகின் பல்வேறு பகுதிகளில்  பேரிடர்கள் ஏற்படக்கூடும் என நமது வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். அதற்கேற்ப சரியாக அதே மார்ச் 28ம் தேதி இந்த நிலநடுக்கம் தென்கிழக்கு ஆசிய நாடுகளையே புரட்டிப் போட்டது. இதே போல் ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் மிகப்பெரும் அளவிலான காட்டுத்தீ சம்பவங்களும் ஏற்பட்டன.

இந்த நிலநடுக்கத்தினால் இப்பகுதிகளில் 700க்கும் மேற்பட்ட பௌத்த ஆலயங்களும், 400க்கும் மேற்பட்ட இஸ்லாமிய தர்காக்களும் முற்றிலுமாக சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாங்காக்கின் பிரபலமான சதுசாக் சந்தை அருகில் கட்டுமான பணியில் இருந்த அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இங்கு பணியில் இருந்த 90 ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர். மாண்டலேயில் ஒரு மசூதியில் தொழுகையில் இருந்த 100க்கும் மேற்பட்ட அணைவருமே இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். மியான்மரில் நேபிடேவ் மற்றும் மாண்டலே உட்பட ஆறு பகுதிகளில் அவசரநிலை பிரகடணம் செய்யப்பட்டது. மாண்டலே ஏர்போர்ட் முற்றிலுமாக சேதம் அடைந்தது.

இதுவரை இந்த பேரிடரில் 2400க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கின்றனர். 3400க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்திருக்கின்றனர். 300க்கும் மேற்பட்டோரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வளவு பெரிய பேரிடர் சம்பவம் நடைபெற்ற நிலையிலும் மியான்மரில் நடைபெற்றுவரும் ராணுவ ஆட்சி காரணமாகவும், அங்கு சில இனக் குழுக்களுக்கு இடையே நடைபெற்று வரும் உள்நாட்டு மோதல்களாலும் பேரிடர் மீட்பு பணிகள் மிகவும் மந்த கதியிலேயே நடைபெற்று வருகின்றன. ஒரே நாளில் ஆறு முறை நில நடுக்கம் ஏற்பட்டு இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக தொடர்ந்து அவ்வப்போது சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசின் மீட்புப்பணிக் குழுவினர் அரசு மற்றும் அரசு சார்ந்த பிரிவினர் மற்றும் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்வதிலேயே மும்முரம் காட்டி வருவதால் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினரை மீட்பதிலும் தங்களின் சேதங்களை அப்புறப் படுத்துவதிலும் தாங்களாகவே ஈடுபட வேண்டிய நிலைதான் அங்கு காணப்படுகிறது. 41 டிகிரி கொளுத்தும் வெயிலில் மக்கள் வெறும் கைகளாலே இடிபாடுகளை அகற்றி மீட்பு பணிகளை செய்து வருகின்றனர். 48 மணி நேரம் கடந்து விட்டபடியால் பல பகுதிகளில் அழுகிய பிணங்கள் துர்நாற்றம் வீசத் தொடங்கி விட்டன. 15 லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழற்து இரண்டு நாள்களாக சாலைகளிலேயே இருந்து வருகின்றனர்.

உணவு, குடிநீர் தடடுப்பாடு, மருந்துப்பொருட்கள் தட்டுப்பாடு, மருத்துவர்கள் தட்டுப்பாடு என மக்களின் சிரமங்கள் தொடர்கதையாகவே இருக்கின்றன. நிவாரணப் பணிகள் முழுமையாக முடிவு பெற்ற பின்னரே சேதங்களின் மதிப்பு மற்றும் உயிரிழந்தோரின் சரியான எண்ணிக்கை ஆகியவை தெரிய வரும்.

இந்திய அரசு சார்பில் 60 மெட்ரிக் டன் நிவாரண பொருட்களுடன் பேரிடர் மீட்புக் குழுவின் 4 குழுக்களும் அனுப்பப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண உதவிகள் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டு வரும் அதே வேளையில் மியான்மர் ராணுவம் உள்நாட்டு போராளிகளுடன் வெடிகுண்டுகளை வீசி தொடர்ந்து சண்டையிட்டு வருவது வேதனையளிப்பதாக உள்ளது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா9 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா3 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா3 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
Take auctions with you wherever you go. Motorcycle towing in dallas, tx for motorcycles, scooters and select powersport units works better when the call starts with simple, accurate information.. East canyon rr 2025 | sportsam events.