Connect with us

சினிமா செய்திகள்

அதிகாலையில் சூர்யாவை சந்தித்த ராதிகா: வைரல் புகைப்படங்கள்!

Published

on

தமிழ் திரையுலகில் 43 ஆண்டுகளாக நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ராதிகா சமீபத்தில் சூர்யாவை அவருடைய இல்லத்தில் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் சூர்யாவின் பல திரைப்படங்களில் நடிகர் ராதிகா நடித்துள்ளார் என்பதும் தெரிந்தே. சிவகுமாருடனும் ராதிகா நல்ல நட்புடன் உள்ளார். இந்த நிலையில் நடிகர் சூர்யாவை நடிகை ராதிகா சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாலையில் காபி மற்றும் உடற்பயிற்சியுடன் ஈடுபட்டிருந்த சூர்யாவை சந்தித்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவில் அவர் சூர்யா உடன் உட்கார்ந்து காபி சாப்பிடுவது போன்ற ஒரு புகைப்படத்தையும் சூர்யாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தில் ஒன்றை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ராதிகா திரையுலகிற்கு அறிமுகமாகி 43 ஆண்டுகள் ஆனதை அடுத்து திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் அவர்களில் சூர்யாவும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 1978ஆம் ஆண்டு நடிகை ராதிகா நடித்த கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 43 ஆண்டுகள் நிறைவு பெற்றது என்பதும் இந்த படத்தை இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கியிருந்தார் என்பதும் தெரிந்ததே.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Different roof shapes for texas homes and their benefits commercial residential roof contractor clark roofing..