தமிழ்நாடு
எடப்பாடி வயதிற்கு வந்துவிட்டாரோ? ஓபிஎஸ் அணியின் ஆலோசனை கூட்டத்தில் நக்கல்!

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ள நிலையில் மக்களை சந்திக்க உள்ளதாக ஓபிஎஸ் தரப்பு கூறியுள்ளது. இதனையடுத்து வரும் 24-ஆம் தேதி திருச்சியில் பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்த உள்ளதாக ஓபிஎஸ் அணியினர் அறிவித்திருந்தனர். அதில் கலந்துகொள்ள சசிகலா மற்றும் தினகரனுக்கு அழைப்பு விடுக்க உள்ளனர்.

#image_title
இந்த மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் அணியின் முக்கிய தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மருது அழகுராஜ், எடப்பாடி பழனிசாமி என்ற துரோகியை குறித்து சொல்ல இருவர் இருந்தால், ஓபிஎஸ் என்ற உத்தமரை சொல்ல 4பேர் இருப்பார்கள் என்றார்.
மேலும் பேசிய அவர், இங்குள்ள ஒவ்வொருவரும் அதிகமான சீர் கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன். சமீபத்தில் ஒருவர் சீர் கொண்டு சென்றார். எடப்பாடி வயதிற்கு வந்துவிட்டாரோ? புதுக்கோட்டையில் இருந்து சீர் கொண்டு செல்லப்பட்டது. அந்த சீரில் குட்கா கொண்டு சென்றுள்ளனர். ஓபிஎஸ் செய்த ஒரு தவறை சொல்லச் சொல்லுங்கள். திருச்சியில் கடல் இல்லை என்ற ஒரு குறையை ஏப்ரல் 24-ஆம் தேதி கொண்டு வரவேண்டும். இதை பார்க்கும் எடப்பாடி பழனிசாமிக்கு லூஸ்மோசன் போக வேண்டும் என்றார்.