இந்தியா
கொரோனா வைரஸ்க்கு மருந்து.. மத்திய அரசு எச்சரிக்கை!

கொரோனா வைரஸ்க்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள மருந்து பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்தைக் கொண்டது.
எனவே பொதுமக்கள் தன்னிச்சையாக, அதை வாங்கி பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
தற்போது, இந்தியாவில் கொரோனா வைரஸ் எதிராக ஹைட்ரோக்சிகுளொரோ குயின் மருந்தைப் பரிந்துரைத்துள்ளது.
மத்திய அரசின் இந்த பரிந்துரையை அறிந்த பலர், மருதங்களில் அதை வாங்கி குவிக்கத் தொடங்கியுள்ளனர். அது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், மத்திய அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.















