சினிமா செய்திகள்
புதிய போஸ்டர் உடன் ரசிகர்கள் சர்ப்ரைஸ் கொடுத்த ‘மாஸ்டர்’..!

தளபதி விஜய் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு மாஸ்டர் திரைப்படம் வெளியாகத் தயாராக உள்ளது.
இன்று புத்தாண்டை முன்னிடு மாஸ்டர் படக் குழுவினர் புதிதாக ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்துகளுடன் சர்ப்ரைஸும் அளித்துள்ளனர். இந்த போஸ்டரில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் மிரட்டல் தோற்றங்கள் இடம் பெற்றுள்ளன. ’தி க்ளாஷ் பிகின்ஸ்’ என்ற வாசகமும் இந்த போஸ்டரில் இடம் பிடித்துள்ளது.

வருகிற ஜனவரி 13-ம் தேதி பொங்கல் தினத்தன்று மாஸ்டர் திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாக உள்ளது. நீண்ட காத்திருப்புக்குப் பின் பெரும் பட்ஜெட், பெரிய நடிகர் ஒருவரின் படம் கொரோனா ஊரடங்குக்குப் பின் வெளியாவதால் திரைத்துறையினர், திரையரங்க உரிமையாளர்கள், ரசிகர்கள் என அனைவரது மத்தியிலும் ஆர்வம் மிகுந்து காணப்படுகிறது. விஜய், விஜய் சேதுபதி உடன் மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.
அனிருத் இசையில் அத்தனைப் பாடல்களும் ஏற்கெனவே ஹிட் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது. இயக்குநர் லோகேஷ் கனகராஜின் மூன்றாவது படமாக மாஸ்டர் அமைகிறது.
#HappyNewYear2021 #Master pic.twitter.com/oKNs6JGbNi
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 1, 2021





















