சினிமா செய்திகள்
Maaveeran Release Date: பக்ரீத்துக்கு வருகிறதா சிவகார்த்திகேயனின் மாவீரன்?

யோகி பாபு நடிப்பில் வெளியாகி தேசிய விருது பெற்ற ‘மண்டேலா’ என்ற படத்தை இயக்கிய மடோன் அஸ்வின், தற்போது சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் ஜோடியாக நடிக்கும் ‘மாவீரன்’ படத்தை இயக்கி வருகிறார்.
Wishing you all a very happy and prosperous new year ❤️❤️❤️
வீரமே ஜெயம்💪🔥#Maaveeran #Mahaveerudu #VeerameJeyam@madonneashwin @AditiShankarofl @ShanthiTalkies @Mee_Sunil @DirectorMysskin @iYogiBabu @iamarunviswa @vidhu_ayyanna @philoedit @bharathsankar12 @sivadigitalart pic.twitter.com/dqgxbTG34c
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) January 2, 2023
மண்டேலா படத்துக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பரத் சங்கர் மாவீரன் இப்படத்துக்கும் இசையமைக்கிறார். பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் யானிக் பென் மாவீரன் இப்படத்துக்காக சிறப்பான சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. மேலும் அதி நவீன மோகோபாட் புகைப்படக் கருவிகள் பயன்படுத்தி இப்படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது போன்ற கேமராவை முன்னதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘விக்ரம்’ திரைப்படத்திற்காக பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் முதல் சிங்கிளான ‘சீன் ஆ சீன் ஆ’ என்ற பாடலின் கிளிம்ப்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. 30 விநாடிகளுக்கும் குறைவான இந்தக் காட்சியில், சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து சென்னையைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நடனக்கலைஞர்கள் மற்றும் 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆடினர். கபிலன், லோகேஷ் இணைந்து எழுதிய இப்பாடலுக்கு ஷோபி நடனப் பயிற்சி அளித்தார்.
இதையடுத்து நடனக்கலைஞர்கள் சங்க உறுப்பினர்கள் சின்னி பிரகாஷ், பாபு, மாரி ஆகியோர் சிவகார்த்திகேயன், மடோன் அஸ்வின், படத்தயாரிப்பாளர் அருண் விஸ்வா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர். ‘மாவீரன்’ படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது சிவகார்த்திகேயன், மிஷ்கின், சுனில் நடிக்கும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது ஜூன் மாதம் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை தினத்தன்று இப்படம் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகாத நிலையில், இணையத்தில் இந்தத் தகவல் வைரலாகி வருகிறது.