Connect with us

இந்தியா

மகள் திருமணத்தை ஏற்பாடு செய்த அப்பா.. ஒரே ஒரு எழுத்தால் ஏற்பட்ட குழப்பம்..!

Published

on

மகளின் திருமணத்திற்காக வரன் பார்த்த தந்தையின் விளம்பரத்தில் ஒரே ஒரு எழுத்து மாறியதால் ஏற்பட்ட குழப்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்தியாவை பொருத்தவரை பெற்றோர்கள் தங்கள் மகளை ஒரு நல்ல மாப்பிள்ளையிடம் கைப்பிடித்து கொடுக்க வேண்டும் என்பதை ஒரு பெரிய கடமையாகவே வைத்திருப்பார்கள். தங்கள் மகள் செல்லும் இடத்தில் நன்றாக வாழ வேண்டும், கஷ்டப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் மாப்பிள்ளை பார்க்கும்போது மிகவும் கவனமாக தேர்வு செய்வார்கள்.

அந்த வகையில் தனது செல்ல மகளுக்கு தந்தை ஒருவர் வரன் பார்ப்பதற்காக விளம்பரம் கொடுத்தார். அந்த விளம்பரத்தை பார்த்து கால் செய்த ஒருவர் நேரில் சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். இதனை அடுத்து அந்த தந்தை தனது மனைவியிடம் மகளை பெண் பார்க்க ஒருவர் வருகிறார் என்று கூறினார். அவரது மனைவியும் மிகவும் சந்தோஷம் அடைந்து அதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

வருங்கால மாப்பிள்ளை வரப்போகிறார் என்ற சந்தோஷத்தில் அந்த நபர் மிகுந்த உற்சாகத்துடன் இருந்த நிலையில் அந்த நபரும் வந்தார். அவரை மரியாதையுடன் வரவேற்று உட்கார வைத்து முதலில் டீ டீ கொடுத்தார். தனக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து அந்த இளைஞர் சற்றே குழம்பிப் போனார். இதனை அடுத்து டீ சாப்பிட்டு விட்டு அதன் பிறகு அந்த இளைஞர், ‘நீங்கள் எந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்று தந்தையிடம் கேட்டார். அந்த நபரின் கேள்வியால் சற்று அதிர்ச்சி அடைந்த தந்தை, ‘நீங்கள் எனது மகளை பெண் பார்க்க வரவில்லையா? என்று கேட்டபோது அவர், ‘நான் பஜாஜ் அலையன்ஸில் இருந்து வருகிறேன், இன்சூரன்ஸ்காக உங்களை சந்திக்க வேண்டும் என்று தான் போன் செய்தேன்’ என்று கூறினார்.

அப்போதுதான் அவர் தனது விளம்பரத்தில் Alliance என்பதற்கு பதிலாக Allianz என்று பதிவு செய்ததை கண்டார். அதன் பிறகு அவர் கொண்டே தனது தவறை அந்த இளைஞரிடம் கூற அந்த இளைஞரும் சிரித்துக்கொண்டே விடை பெற்றுக்கொண்டு சென்றார். இது குறித்த ட்விட் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ஏராளமான பேர் ரசித்து இந்த வீட்டுக்கு கமெண்ட்ஸ்களை நகைச்சுவையாக பதிவு செய்து வருகின்றனர்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?