சினிமா செய்திகள்
கீர்த்தி சுரேஷூக்கு கொரோனா பாதிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக டுவிட்டரில் அறிவித்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கமல்ஹாசன், வடிவேலு, சத்யராஜ், ஷெரின், த்ரிஷா, ரைசா வில்சன் உள்பட ஒரு சில திரையுலக பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதும், படிப்படியாக அவர்கள் ஒவ்வொருவராக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
எனக்கு லேசான கொரோனா பாதிப்பு இருப்பதால் மிக விரைவில் தான் மீண்டும் விடுவேன் என்றும் வழக்கமான பணிகளில் மிக விரைவில் ஈடுபடுவேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செய்து கொள்ளுங்கள் என்றும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் விரைவில் குணமாக வேண்டும் என திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
— Keerthy Suresh (@KeerthyOfficial) January 11, 2022














