சினிமா செய்திகள்
கீர்த்தி சுரேஷ் அப்பாவுக்கு கிடைத்த புதிய பதவி!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ’அண்ணாத்த’ செல்வராகவனின் ’சாணி காகிதம்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமின்றி பாலிவுட் திரை உலகிலும் களமிறங்க உள்ளார் என்பதும் அவர் நடிக்க உள்ள பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் அம்மா மேனகா ஒரு நடிகை என்பதும் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கீர்த்தி சுரேஷின் அப்பா சுரேஷ் குமார் ஒரு பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் தயாரித்த மலையாள திரைப்படம் ஒன்றில் தான் நடிகையாக கீர்த்தி சுரேஷ் அறிமுகமானார்.
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ்குமார், கேரள பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.







