Connect with us

சினிமா செய்திகள்

மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு ஆதரவாக நடிகை கங்கனா போஸ்ட்; வறுத்தெடுத்த நடிகர் சித்தார்த்!

Published

on

மகாத்மா காந்தியைத் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்த வலதுசாரியான நாதுராம் கோட்சேவுக்கு ஆதரவாக, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் ட்விட்டரில் போஸ்ட் போட்டு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார்.

தன் திறமைக்காகவிட, சர்ச்சைக்காக பெயர் எடுத்தவர் கங்கனா. வலதுசாரி சிந்தனையில் அதிக நாட்டமுடைய கங்கனா, தொடர்ந்து பிரதமர் மோடிக்கு ஆதரவாக கருத்து சொல்லி வருபவர். அதேபோல பாஜகவும் அவருக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுக்கும்.

இந்நிலையில் கங்கனா, காந்தியின் நினைவு தினமான நேற்று கோட்சேவின் புகைப்படங்களைப் பகிர்ந்து, ‘ஒவ்வொரு கதைக்கும் மூன்று பக்கங்கள் இருக்கும். என்னுடைய பக்கம், உங்களுடைய பக்கம் மற்றும் உண்மையின் பக்கம். ஒரு நல்ல கதை சொல்லி, ஒரு கதையை முழுமையாக சொல்லவோ, உண்மையைப் போட்டுடைக்கவோ மாட்டார். அதனால் தான் நம் பாடப் புத்தகங்களில் சுவாரஸ்யமே இருக்காது. எப்போதும் வெளிப்படையாக சொல்லி கெடுத்துவிடும்’ என்று ஏதேதோ உளறிக் கொட்டியுள்ளார். அவர் கோட்சேவுக்கு ஆதரவாகத்தான் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார் என்பது தெரிகிறது.

இதற்கு நடிகர் சித்தார்த், ‘இந்த ஆள், ஏன் தன் மனதில் இருப்பதை வெளிப்படையாக சொல்லாமல் மென்று முழுங்கி வருகிறார்?’ என நக்கல் கலந்த தொனியில் கேள்வி எழுப்பியுள்ளார். சித்தார்த், பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

வணிகம்14 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?