சினிமா செய்திகள்
‘சந்திரமுகி2’ படப்பிடிப்புக்குத் திரும்பிய கங்கனாரனாவத்!

நடிகை கங்கனாரனாவத் ‘சந்திரமுகி2’ படப்பிடிப்புக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
பி.வாசு இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஜோதிகா உள்ளிட்டப் பலரது நடிப்பில் வெளியாகி வெற்றிப் பெற்றத் திரைப்படமான ‘சந்திரமுகி’யின் அடுத்த பாகம் தற்போது உருவாகி வருகிறது.
முதல் பாகத்தைப் போலவே, இரண்டாவது பாகத்தையும் இயக்குநர் பி.வாசுவே இயக்குகிறார். ராகவா லாரன்ஸ், ராதிகா சரத்குமார், வடிவேலு உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.
கங்கனாரனாவத் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததை படக்குழு அறிவித்தது. இப்போது தன்னுடைய க்ளைமாக்ஸ் போர்ஷனுக்காக மீண்டும் படப்பிடிப்புத் தளத்திற்கு சென்றுள்ளார் கங்கனாரனாவத்.
இந்தப் புகைப்படங்களைத் தனது சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ள கங்கனா தெரிவித்திருப்பதாவது, ‘மீண்டும் ‘சந்திரமுகி2’ படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றுள்ளேன். எனது அணியுடன் உள்ளேன். இப்போது நான் ஒப்பனை செய்து கொண்டிருக்கும் காட்சி படத்தில் முக்கியமானது. எல்லோரும் இதை எதிர்பார்த்து இருக்கிறோம்’ எனத் தெரிவித்து இருக்கிறார்.
‘சந்திரமுகி’ படத்தில் ஜோதிகாவின் ‘ரா ரா’ பாடலும் அதன் நடனமும் ஹிட் ஆனது போலவே, இந்தப் படத்திலும் அப்படியான ஒரு நடனம் இருக்கும் எனவும் அதற்கான காட்சிக்குதான் கங்கனா தயாராகிக் கொண்டிருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.