சினிமா
அவசரம்னா அப்படியே போயிடு.. பீச்சாங்கையிலேயே வடிவேலுவை விரட்டி விட்ட பிரபல இயக்குநர்?

சந்திரமுகி 2 படத்தை இயக்கி வரும் இயக்குநர் பி. வாசு வைகைப்புயல் வடிவேலுவை பீச்சாங்கையிலேயே விரட்டி விட்ட சம்பவம் நடந்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்பட்டு பின்னர் மீண்டும் தடை நீக்கப்பட்ட நிலையில், இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்திருந்தார் வடிவேலு.

#image_title
மீம் மன்னன் வடிவேலுவை வச்சு சுராஜ் செய்தாரா? அல்லது சுராஜை வைத்து வடிவேலு செய்தாரா என தெரியவில்லை. இரண்டு பேரும் சேர்ந்து லைகா நிறுவனத்தை நல்லா வச்சு செய்து விட்டனர் என கோடம்பாக்கத்தில் பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர். வடிவேலுவுக்கு பாவம் பார்த்து ஷங்கருடன் லைகா சமரசம் பண்ணதுக்கு நல்ல செருப்படி கிடைத்துள்ளது என்றும் அந்த படம் தோல்விய அடைந்த நிலையில், விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.

#image_title
இந்நிலையில், சமீபத்தில் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்த போது அவசரமாக வேறு ஒரு ஷூட்டிங்கிற்கு கிளம்புறேன் என வடிவேலு கரைசல் பண்ணினார் என்றும் அப்போது இந்த சீனை முடித்துக் கொடுத்துட்டு எங்கேயாவது போகட்டும் என உதவியாளரிடம் இயக்குநர் பி. வாசு சொல்லியதையும் கேட்காமல், அவசரமாக கிளம்புறேன் என வந்து இயக்குநர் பி. வாசுவிடம் வடிவேலு சொல்லி நிற்க, சரி சரி கிளம்பு என்பதை போல பீச்சாங்கையிலேயே பி. வாசு வடிவேலுவை விரட்டி விட்டதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சந்திரமுகி இயக்குநர் பி. வாசுவின் இந்த செயல் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை மனதளவில் பாதித்து விட்டதாகவும் கூறுகின்றனர்.