சினிமா செய்திகள்
கமல், ரஜினியை இணைக்க முன்னணி நிறுவனம் திட்டம்? விரைவில் அறிவிப்பு!

வித்தியாசமான கதை மற்றும் மாஸ் நடிகர்களை ஒரே படத்தில் நடிக்க வைப்பது போன்ற முயற்சிகளை எடுக்க தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல் கட்டமாக கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரையும் இணைத்து ஒரு திரைப்படத்தை உருவாக்க இருப்பதாகவும் இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 300 கோடி என்றும் கூறப்படுகிறது.
உலக அளவில் கமல் ஹாசன் மற்றும் ரஜினி காந்த் படங்களுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருப்பதால் இந்த படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்காக மூன்று இயக்குனர்களிடம் கதை கேட்க பட்டுள்ளதாகவும் முழுக்க முழுக்க குடும்பம் மற்றும் சென்டிமென்ட் காமெடி ஆகியவை கொண்ட கதையாக இந்தப் படம் இருக்கும் என்றும் கமல்ஹாசன் ரஜினிகாந்த் ஆகிய இருவருக்குமே அவர்களுடைய வயதுக்கேற்ற கேரக்டராக இருக்கும் வகையில் கதை தேர்வு செய்யப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து தகவல் வந்துள்ளது .
இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.