Connect with us

சினிமா செய்திகள்

ஆர்யாவுக்கு கமல்ஹாசன் கொடுத்த பிறந்தநாள் பரிசு!

Published

on

நடிகர் ஆர்யாவுக்கு உலக நாயகனும், மக்கள் நீதி மையம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் பிறந்த சிறப்புப் பரிசு கொடுத்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் ‘சார்பாட்டா பரம்பரை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் இந்த படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையில் பெறும் வரவேற்பைப் பெற்றது.

அதை பார்த்த நடிகர் கமல் ஹாசன், ஆர்யாவை நேரில் அழைத்து தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். டிசம்பர் 11-ம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ஆர்யா, கமல் ஹாசன் தன்னை பாராட்டி இருப்பதுதான் இந்தாண்டின் எனது சிறப்புப் பிறந்தநாள் பரிசு என்று தெரிவித்துள்ளார்.

பாக்சிங் விளையாட்டு மற்றும் அரசியல் குறித்துப் பேசும் சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவுடன் கலையரசன், சந்தோஷ் பிரதாப் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணம் இசையமைத்து வருகிறார்.

ஆர்யாவின் திரைப்பட வாழ்க்கையில் இந்தப்படம் பெரிய பெயர் வாங்கித்தந்த படமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
trusted handyman services throughout waco, temple, and killeen.