Connect with us

தொழில்நுட்பம்

ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா வழங்கும் ‘Working from home’ பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்கள்!

Published

on

கொரோனா வைரஸ் எதிரொலியாக 21 நாட்கள் மக்கள் வெளியில் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே விட்டிலிருந்து வேலை செய்வதற்காக ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் வெளியிட்டுள்ள ‘Working from home’ பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்கள் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

ஜியோ

ரிலையன்ஸ் ஜியோவின் ‘Working from home’ பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தின் படி 251 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 51 நாட்களுக்கு, தினமும் 2 ஜிபி இணையதள தர்வு கிடைக்கும். அளிக்கப்பட்டுள்ள தரவு கட்டுப்பாட்டைக் கடந்தால், இணையதள வேகம் 64 kbps ஆக குறையும். இலவச குரல் அழைப்புகளும் செய்ய முடியும்.

கூடுதல் தரவு தேவைப்பட்டால், 11 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 800 எம்பி தரவும், 21 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 2ஜிபி தரவும், 51 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 6ஜிபி தரவும், 101 ரூபாய்க்கு ரீசாஜ் செய்தால் 12 ஜிபி தரவும் கிடைக்கும். இந்த ரீசார்ஜ் செய்யும் போது ஜியோ அல்லாத பிற நெட்வொர்க் அழைப்புகளை மேற்கொள்வதற்கான 75, 200, 500 மற்றும் 1000 நிமிடங்கள் கிடைக்கும்.

ஏட்ர்டெல்

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 398 ரூபாய்க்கு ரீசாஜ் செய்தால், 28 நாட்களுக்குத் தினமும் 3 ஜிபி இணையதள தரவு பெறலாம். இலவச ஜீ5 சந்தாவுடன் மொத்தம் 84 ஜிபி தரவு கிடைக்கும்.

349 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 28 நாட்களுக்கு, தினமும் 2ஜிபி இணையதள தரவு, அமேசான் ப்ரைம் சந்தா மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் உள்ளிட்டவை கிடைக்கும்.

449 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 56 நாட்களுக்கு, தினமும் 2ஜிபி தரவு, இலவச குரல் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் மற்றும் ஜீ5 சந்தா உள்ளிட்டவை கிடைக்கும்,

558 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 56 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி தரவு, குரல் அழைப்புகள், எஸ்எம்எஸ் ஜீ5 சந்தா உள்ளிடவை கிடைக்கும்.

வோடாஃபோன் ஐடியா

வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைக் கவர, இரட்டிப்பு தரவுகள் நன்மையை அளித்து வருகின்றன.

249 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 28 நாட்களுக்கு, தினம் 3 ஜிபி இணையதள தரவு, 100 இலவச எஸ்எம்எஸ் சேவை கிடைக்கும்.

399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 56 நாட்களுக்கு, தினமும் 3ஜிபி தரவு கிடைக்கும்.

வணிகம்2 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?