வணிகம்
கொரோனா பாதிப்பு சிறப்பு நிதியாக ரூ.1.70 லட்சம் கோடி அறிவிப்பு.. டாப் 10 முக்கிய அம்சங்கள் என்னென்ன?

மத்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனா பாதிப்பு சிறப்பு நிதியாக 1.70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
கொரோனா சிறப்பு நிதி அறிவிப்பின் டாப் 10 அம்சங்கள் குறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
1) மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ரூ.50 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு.
2) விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதில் முதற்கட்டமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
3) முறைசாரா தொழிலாளர்களுக்குக் கூடுதலாக ரூ.2000 வழங்கப்படும்.
4) 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் 182 ரூபாயிலிருந்து 202 ரூபாயாக உயர்வு.
5) ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கப்படும்.
6) உஜ்வாலா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்.
7) அடுத்த 3 மாதத்திற்கான பிஎப் தொகையை அரசே செலுத்தும்.
8) தொழிலாளர் வைப்பு நிதியிலிருந்து 75 சதவீதம் பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி.
9) ஏழைகளுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு 5 கிலோ அரசி அல்லது கோதுமை இலவசம்.
10) மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அடமானம் இல்லாமல் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

















