விமர்சனம்
Agilan Review: இதுக்கு பூலோகத்தையே இன்னொரு முறை பார்க்கலாம்.. ஆட்டம் கண்ட அகிலன்.. விமர்சனம் இதோ!

பொன்னியின் செல்வன் படத்துக்கு முன்னாடியே வரப் போவதாக அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் ரிலீஸ் தள்ளிப்போனப்பவே இந்த படம் தேறாது என நினைத்ததை போலவே பொன்னியின் செல்வன் 2வுக்கு முன்பாக ரிலீஸாகி ரசிகர்களை சோதித்து விட்டது இந்த அகிலன்.
பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர், ஹரிஷ் பெரடி, சிரக் ஜானி, தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ளது அகிலன் திரைப்படம்.

#image_title
ஹார்பரில் கிரேன் ஆப்பரேட்டராக பணியாற்றும் அகிலன் (ஜெயம் ரவி) அந்த ஹார்பரில் கள்ளத் தொழில் செய்யும் ஹரிஷ் பெரடியை போட்டுத் தள்ளி விட்டு அந்த இடத்துக்கு வரத் துடிக்கிறார்.
நெகட்டிவ் ஷேடில் இங்கே சரி, தப்பு, குற்ற உணர்ச்சி என்பது எதுவுமே இல்லை என்றும் அதையெல்லாம் வைத்து மனிதர்களை கட்டிப் போட நினைத்துள்ளனர் என்கிற ரீதியில் வசனம் பேசி நடித்துள்ள காட்சிகள் மிரட்டலை தருகின்றன.

#image_title
பூலோகம் படத்தில் விளையாட்டை வைத்து விளம்பர நிறுவனங்கள் செய்யும் வியாபார அரசியலை எடுத்துச் சொன்ன இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் இந்த படத்தில் துறைமுகத்தில் நடக்கும் ஊழல்களையும் அரிசி அரசியலையும் கையில் எடுத்த விதம் பாராட்டுக்குரியது என்றாலும், பூலோகம் படம் அளவுக்கு கூட இந்த படத்தின் திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமல் ஓட்டை விழுந்த டைட்டானிக் கப்பல் போல மூழ்கி விடுகிறது தான் ரசிகர்களை ரொம்பவே இரிடேட் செய்கிறது.
பிரியா பவானி சங்கருக்கு காக்கிச் சட்டை போட்டாலும், கேரக்டராக பெரிதாக எதையுமே இயக்குநர் எழுதவில்லை. ஜெயம் ரவிக்கு வில்லன்களாக வரும் ஹரிஷ் உத்தமன், ஹரிஷ் பெரடி மற்றும் சிரக் ஜானி தங்களுக்கு கொடுத்த ரோலை கச்சிதமாக செய்துள்ளனர்.

#image_title
ஆனால், படம் பார்க்கும் நமக்குத் தான் அது ரொம்பவே டார்ச்சராக இருப்பதாக தோன்றுகிறது. படம் முழுக்கவே கடலையும் ஹார்பரையும் சுற்றியே நடப்பது ஆரம்பத்தில் ஆச்சர்யத்தை தந்தாலும், குண்டுச் சட்டியிலேயே இயக்குநர் ஓட்டியுள்ள குதிரையை 20 நிமிடங்களுக்கு பிறகு பார்க்கவே கடுப்பாகி விடுகிறது.
சாம் சி.எஸ். இசையில் பின்னணி இசையும் பாடல்களும் ஓகே ரகம் தான். கேமரா, எடிட்டிங் என இந்த படத்துக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்துள்ளனர். ஹீரோ என்பதால் ஜெயம் ரவி மட்டும் எக்ஸ்ட்ரா எஃபோர்ட் போட்டு நடித்திருப்பது கண்கூடாக தெரிகிறது. ஆனால், இயக்குநர் இந்த முறை ரொம்பவே சொதப்பி விட்டது தான் இந்த அகிலன் படம் பலமாக அடிவாங்க காரணம். ட்ரெய்லரை பார்த்து ஏமாற வேண்டாம் என்பதற்கு இந்த படமும் ஒரு சூப்பர் உதாரணமாகி உள்ளது.
ரேட்டிங்: 2.5/5.