சினிமா
ஒரு சகாப்தத்தையே கண் முன்னாடி காட்டிட்டாங்க.. முதலமைச்சர் ஸ்டாலின் கண்காட்சியை பார்த்த ஜெயம் ரவி பேட்டி!

சினிமா பிரபலங்கள் பலரும் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்க்கை பயண புகைப்படக் கண்காட்சியை கண்டு ரசித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது நடிகர் ஜெயம் ரவி முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்க்கை பயண புகைப்படக் கண்காட்சியை பார்த்த பின்னர் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.

#image_title
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஏற்கனவே நடித்த சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா உள்ளிட்ட பிரபலங்கள் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நிலையில், முதன் முறையாக மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் படத்தின் 2 பாகங்களிலும் ஜெயம் ரவி டைட்டில் ரோலிலேயே நடித்து அசத்தினார்.
அருள்மொழி வர்மனாக கம்பீரமாக நடித்து ராஜ ராஜ சோழனாக எப்படி மாறுகிறார் என்கிற கதையில் ஜெயம் ரவி தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாகவே நடித்தார் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

#image_title
பொன்னியின் செல்வன் 2 படத்தைத் தொடர்ந்து இறைவன், ஜன கண மன, சைரன், ஜீனி என பல படங்கள் வரிசையாக ஜெயம் ரவி கைவசம் உள்ளன.
இந்நிலையில், திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கைப் பயண புகைப்படக் கண்காட்சியை பார்த்த நடிகர் ஜெயம் ரவி “வேற எங்கேயும் இதுமாதிரி புகைப்படக் கண்காட்சியை நான் பார்த்தது இல்ல. ஒரு சகாப்தத்தையே கண் முன்னாடி காட்டிட்டாங்க. சினிமா மாதிரி இருக்கு” என பேசியுள்ளார்.