செய்திகள்
அடுத்த 3 நேரம் கனமழை தொடரும்… 4 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்….

தமிழக கடற்கரையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று காலை முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து நண்பகல் முதல் மழை பெய் து வருகிறது.
பகலில் சில பகுதிகளில் லேசான மழை பெய்த நிலையில், மாலையில் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. எனவே, சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல பகுதிகள் சேறும் சகதியுமாக மாறியது. எனவே, வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினார்.
மாலை 6.30 மணி நிலவரப்படி அதிக பட்சமாக எம்.ஆர்.சி நகரில் 18 செ.மீ மழை பதிவாகியிருந்தது மேலும், நுங்கம்பாக்கம் – 12 செ.மீ, நந்தனம் -12 செ.மீ, மீனம்பாக்கம் – 10 செ.மீ மழை பெய்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று இரவும் இந்த மாவட்டங்களில் மழை நீடிக்கும் எனவும், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



















