சினிமா
மாநாடு படத்தில் சிம்புவுக்கு இரட்டை வேடமா? விளக்கம் அளித்த சுரேஷ் காமாட்சி!

மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மற்றும் செக்கெண்ட் லுக் வெளியானது முதல் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகி வந்தன.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிம்புவின் நெற்றியில் புல்லட்டும், செக்கண்ட் லுக் போஸ்டரில் ஸ்டைலிஷாக தலையில் துப்பாக்கி வைத்துள்ளது போலவும் போஸ்டர்கள் வெளியாகி இருந்தன.

அதை தொடர்ந்து மாநாடு படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று செய்திகள் வந்தன. இந்நிலையில் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அண்மையில் அளித்த பேட்டியில், சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கவில்லை. ஒரு வேடத்தில்தான் நடிக்கிறார் என்று கூறியிருந்தார்.

மேலும் படம் ஈஸ்வரன் படம் போல, ஒரே ஷெட்யுலாக ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட உள்ளது. 2021 ஏப்ரல் அல்லது மே மாதம் மாநாடு படம் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் படம் பெங்கலுக்கு வெளியாகிறது. பின்னர் மகா திரைப்பட வெளியாக வாய்ப்புள்ளது. சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3-ம் தேதி மாநாடு பட டீசர் அல்லது மாகா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளன.
இதை வைத்து பார்க்கும் போது 2021 ஆகஸ்ட் மாதத்திற்குள் சிம்பு நடிப்பில் குறைந்தது 3 படங்கள் வெளியாகும். மாநாடு ஷூட்டிங் முடிந்த உடன் மஃப்டி படத்தின் ஷூட்டிங்கில் சிம்பு கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.
மாநாடு, மஃப்டி படத்தின் ஷூட்டிங் ஊரடங்கிற்கு முன்பு, உடல் எடையைக் குறைப்பதற்கு முன்பே தொடங்கப்பட்டது, எனவே அதை சரி செய்யும் படி பிரத்தியேக தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளதாகவும் மாநாடு பட தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.













