சினிமா
இதைப்பற்றி நான் மஞ்சிமாவுக்கு எதுவும் சொல்ல மாட்டேன்: கெளதம் கார்த்திக்!

மஞ்சிமாவின் உடல்கேலி குறித்தான கேள்விக்கு கெளதம் கார்த்திக் பதிலளித்துள்ளார்.
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கக் கூடிய திரைப்படம் ‘பத்து தல’. இன்று திரையரங்குகளில் வெளியாகி இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் தொடர்பாக அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகை மஞ்சிமா மோகனின் உடல் கேலி குறித்தான கேள்விக்கு கௌதம் கார்த்திக் பதிலளித்துள்ளார். அதில் மஞ்சிமா சமீப காலமாக அதிகம் எதிர்கொண்டு வரும் உடல் கேலி குறித்து அவருக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு கௌதம் கார்த்திக், “அதைப்பற்றி நான் மஞ்சிமாவுக்கு சொல்ல எதுவுமே இல்லை. என் மனைவி எப்படி இருந்தால் அவர்களுக்கு என்ன என்பது தெரியவில்லை. உண்மையில் உடல்நிலை குறித்து நீண்ட காலமாக மஞ்சிமா விமர்சனங்களை எதிர் கொண்டு தான் வருகிறார். அவர் தைரியமானவர். உடல் கேலி செய்வதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை.
அப்படி இருக்கும் பொழுது அப்படி சொல்பவர்களை நிச்சயமாக அவர்களுக்கு போதுமான புரிதல் இல்லை என்று சொல்லி நிராகரித்து விடுவார். மற்றபடி அவருக்கு என்ன பிடிக்குமோ அதை அதை அதை நான் செய்துவிட்டு போவேன்” என்று கெளதம் கார்த்திக் சொல்லி இருக்கிறார்.