தமிழ்நாடு
எங்களுக்கும் சுயநலம் இருக்கு..!- சீமான் ஓப்பன் டாக்
Published
2 years agoon
By
Barath
நாம் தமிழர் கட்சி, இதுவரை சந்தித்த அனைத்துத் தேர்தல்களைப் போலவே 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலையும் தனித்தே சந்திக்கிறது. முன்னர் நடந்த தேர்தலில் ஆணுக்கும் பெண்ணுக்கு சரிபாதி தொகுதிகள் ஒதுக்கியது போலவே, இந்த தேர்தலிலும் சமமாக இடங்களை ஒதுக்கி களத்தில் நிற்கிறது நாம் தமிழர். அந்தக் கட்சியின் தலைமைப் பேச்சாளரான சீமான், கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்துத் தொடர்ந்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இந்த முறை சீமான், சென்னை, திருவொற்றியூர் தொகுதியில் நேரடியாக களமிறங்கியுள்ளார். இந்நிலையில் அவர், ‘எங்களுக்கு ஒரே சுயநலம்தான் இருக்கிறது. மக்களின் நலன்தான் எங்கள் சுயநலம். அவர்களின் எதிர்காலப் பாதுகாப்புதான் எங்கள் கனவு.
நாங்கள் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதில்லை. ஏனென்றால் எங்களிடம் பணம் இல்லை. இருந்தாலும் நாங்கள் அளிக்கப் போவதில்லை. ஏனென்றால் எங்கள் கொள்கை அதுவல்ல.
கோடிகளைக் கொட்டுபவர்களை நம்ப வேண்டாம். அவர்கள் கோடிகளைக் கொட்டுகிறார்கள். நாங்கள் ஆகச் சிறந்த கொள்கைகளைக் கொட்டுகிறோம். நல்ல கருத்துகளை மக்களிடம் விதைத்துவிட்டால் தவறான அரசு உருவாகாது. உருவானாலும் அது நிலைக்காது’ என்று தெரிவித்துள்ளார்.
You may like
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியில் கட்சி தலைவர்கள்.. பரபரப்பான தகவல்!
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் தம்பி விஜய்; அவரை போல யாராலும் ஆட முடியாது – சிமான் பேச்சு!
சீமான் மகனுக்கு வாழ்த்து கூறி கவிதை எழுதிய வைரமுத்து
நெஞ்சுக்கு நீதி’ படத்தை இந்தியில் எடுத்தால் நன்றாக இருக்கும்: அமைச்சரின் பேச்சால் பரபரப்பு
சீமான் ஒரு பாலியல் குற்றவாளி, அவர் இருக்க வேண்டிய இடம் சிறை: ஜோதிமணி எம்பி
கருப்பா இருக்குற எல்லாரும் திராவிடர்களா? எருமை மாடு திராவிடனா? சீமான் கேள்வி