தமிழ்நாடு
தமிழகத்தின் வளர்ச்சியா? உதயநிதியின் வளர்ச்சியா? அமித்ஷா

தமிழகத்தின் வளர்ச்சி வேண்டுமா? உதயநிதியின் வளர்ச்சி வேண்டுமா? என்பதை மக்கள் முடிவு செய்து கொள்ளுங்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்றைய தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரது பிரச்சாரங்களும் தமிழகம் முழுவதும் பட்டையை கிளப்பி வருகின்றன. இந்த நிலையில் ஸ்டாலினை விட உதயநிதி மத்திய அரசை கடுமையாக தாக்கி வருகிறார் என்பதும் குறிப்பாக மோடி, அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் டெல்லியில் இருந்து வரும் தேசிய தலைவர்கள் ஸ்டாலினை மட்டுமின்றி தற்போது உதயநிதியையும் குறிவைத்து விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று தமிழகத்தில் தேர்தல் பரப்புரை செய்ய வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தின் வளர்ச்சி வேண்டுமா? அல்லது உதயநிதியின் வளர்ச்சி வேண்டுமா? என மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ஊழல் செய்த காங்கிரஸ் திமுக வேண்டுமா? ஊழல் செய்யாத பாஜக கூட்டணி வேண்டுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அவருடைய இந்த பிரச்சாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


















