சினிமா செய்திகள்
முதல் பாதி செம: ‘கர்ணன்’ படம் பார்த்த நடிகை டுவிட்!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிய ‘கர்ணன்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளதை அடுத்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இன்று காலை திரையரங்குகளில் பார்த்து ரசித்து வருகின்றனர்.
சென்னையில் இன்று காலை 6 மணிக்கே ஒரு சில திரையரங்குகளில் முதல் காட்சி ஆரம்பமாகி விட்டது என்பதும் ரசிகர்கள் படம் பார்த்து இடையிடையே டுவிட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனுஷின் ‘கர்ணன்’ படத்தை பார்த்த நடிகை ஆர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படம் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். முதல் பாதி முடிந்துவிட்டது என்றும் மிகவும் இன்ட்ரஸ்டிங்காக சென்று கொண்டிருக்கின்றது என்றும் குறிப்பாக குதிரை யானை கழுதை ஆகியவற்றை வைத்து செம கருத்து கூறியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ் என்றும் தனுஷ் மிகவும் மாஸ் ஆக நடித்து உள்ளார் என்றும் கூறிய நடிகை ஆர்த்தி இரண்டாம் பாதிக்காக வெயிட்டிங் என்றும் கூறியுள்ளார்.
மேலும் கர்ணன் படத்தை பார்த்த பெரும்பாலானவர்கள் பதிவு செய்து வரும் டிவிட்டில் இருந்து கிட்டத்தட்ட அனைத்துமே பாஸிட்டிவ் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன என்றும் எனவே இந்த படம் தனுஷின் மற்றொரு வெற்றி படமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த படத்தின் முழு விமர்சனம் வெளிவரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
#karnanreview
First half very engaging interesting semma detailing elephant horse donkey ???? @dhanushkraja sir maaassss #mariselvaraj @theVcreations ????????????????????????
Waiting for second half pic.twitter.com/Crcq1FDRhH— Actress – HarathiGanesh (@harathi_hahaha) April 9, 2021






















