Connect with us

இந்தியா

லஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…? பொறி வைத்துப் பிடிக்கப்பட்டால் நமது வேலை முடியுமா? எப்போது முடியும்?

Published

on

ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு லஞ்ச ஒழிப்புத்துறை அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. லஞ்ச ஒழிப்பு துறை அமைப்பானது, முற்றிலும், சென்னையில் தலைமைச்செயலகத்தில் இயங்கி வரும் CHIEF SECRETARY அந்தஸ்த்தில் உள்ள VIGILANCE COMMISSIONER- அவர்களின் கட்டுப்பாட்டிலும், சென்னை ஆலந்தூரில் உள்ள DGP அல்லது ADDL.DGP அந்தஸ்த்தில் உள்ள,ஒரு மூத்த IPS அதிகாரியின் தலைமையில் இயங்கிவரும், DVAC என்றழைக்கப்படும் “Directorate of Vigilance and Anti-Corruption”என்ற இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டிலும் மட்டும்தான் செயல்படுகின்றனர். இன்னும் சொல்லப்போனால், மேற்சொன்ன மாவட்ட அதிகாரிகளின் செயல்பாடுகளையே கண்காணித்து, தவறு இருப்பின் நடவடிக்கை எடுக்க கடமைப்பட்டவர்கள்.

லஞ்ச ஒழிப்புச் சட்டம்-என்று அழைக்கப்படும் PREVENTION OF CORRUPTION ACT 1988- பிரிவு-2 படி அரசுப்பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, மக்களால் பொதுப்பணிக்கென தேர்ந்தெடுக்கப்படும், பஞ்சாயத்துப் போர்டு தலைவர், வார்டு உறுப்பினர்கள், நகரம், மாவட்டம் மற்றும் முனிசிபல் கவுன்சிலர்கள், சேர்மேன் மற்றும் அரசு நிர்வாகத்தில் உள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளும்- “PUBLIC SERVANTS” என்ற வரையரறைக்குட்பட்டவர்கள்தான்.

சமீபத்தில், திருச்சி, நாகப்பட்டினம் மற்றும் பல மாவட்டங்களில், பஞ்சாயத்துபோர்டு தலைவர்களைக்கூட லஞ்சஒழிப்பு போலீஸார் பொறி வைத்து பிடித்துள்ளார்கள்.

லஞ்சத்தில் நான்கு வகைகள் உண்டு. அவை பின்வருமாறு:

(a) Demanding bribe from any individual, either to do any official act, or to do any service or disservice to any one

(b) Mega Level-Organised Corruption, by colluding with each other, viz. the whole team of officials right from bottom to top, the contractors and the middle men, would be colluded with each other. In this type of corruption, the Public/Govt money alone will be siphoned

(c) Minor Level-Organised Corruption, wherein the enforcing officials in the field and the organised criminals in the same area, would collude with each other for sharing the ill-gotten money.

(Example- The Corrupt Officials would collude with the Prohibition Offenders, Gamblers, Brothel-house-runners, Smugglers and other anti social elements in their jurisdictions for ill-gotten money)

(d) Petty corruption ( Mostly practiced by Corruptive Traffic Police men with the road side vendors and the Last grade servants, almost in all the Government offices, wherein only a meager amount of Rupees, viz. Rs- 100/ to 500/ are involved)

1-வது வகையான லஞ்சத்தில் ஈடுபடுபவர்கள்தான் அடிக்கடி “பொறி வைப்புநடவடிக்கையில் சிக்குவார்கள்.ஏனெனில், இதில் பாதிக்கப்பட்ட நபர் Motivate-ஆகி புகார் அளிக்க தயாராக இருப்பார்.

2-வது வகையான லஞ்சம் வொயிட்காலர் (white color) லஞ்சம் எனப்படும். இந்த வகை லஞ்சத்தில் இழப்புக்குண்டாவது அரசாங்கம்தான். இழப்புக்குண்டாகும் அரசுப்பணத்தின் அளவு கற்பனைக்கு எட்டாததாக இருக்கும்.

எப்போதாவது சில நேரங்களில் அத்திபூத்தார் போல சிலநேர்மையான அதிகாரிகளின் கண்களில் படும்போது மட்டும் திடீரென வெடித்து பரபரப்பாகும்.இந்த வகையான லஞ்சத்தால் எற்படும் பாதிப்பு கேன்ஸர் போன்றது. ஏனெனில், இதன் பாதிப்பு, கண்களுக்கு உடனடியாகத் தெரியாது, ஆனால், நாளடவில் ஏற்படும் பாதிப்பு மரணத்திற்கு ஒப்பானது.

3-வது வகையான லஞ்சம், கண்ணுக்கு எதிரேயே தெரியும். கள்ளச்சாரயம், சூதாட்டங்கள், ப்ராத்தல்-ஹவுஸ்கள், கலப்படங்கள், கட்டப்பஞ்சாயத்துக்கள், இன்னும் பல.

4-வது வகை லஞ்சம் பொதுமக்களுக்கு அன்றாடத் தொல்லைகள் தரும் வகையைச் சேர்ந்தது.100ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கும் லஞ்சத்தில் ஈடுபடும் ஒரு கடை நிலை ஊழியரை தண்டிப்பது பரிதாபத்துக்கு உரியதாகத் தெரிந்தாலும், பொது இடங்களில் அச்செயல் மிகுந்த தொல்லைக்குரியதாகவே தெரியும். 4-வது வகையில் சொல்லப்பட்டுள்ள Petty-Corruption என்பது பிச்சைக்காரர்கள் அதிகார தொனியில், பிச்சை எடுப்பது போலத்தான்.

லஞ்ச ஒழிப்பு நடவடிக்கையிலும்,மூன்று வகைகள் உண்டு.

1) Trap Case. ( பொறி வைத்துப்பிடித்தல் )

2) Regular case. (FIR will be registered later based on the outcome of (a)Detailed enquiry (b) Preliminary enquiry(c) Surprise Check (d) even sometimes from Vigilance reports.

3)Regular case for D.P Assets ( FIR will be registered by DVAC for the possession of Disproportionate Assets by the public servants.FIR will be registered ,only after the Vigilance Commision and the DVAC satisfied from the preliminary enquiry or Detailed enquiry that there is a case of prima facie of D.P.Assets against the corruptive public servants. )

எப்படி புகார் அளிப்பது:

இதில், லஞ்சம்கொடுத்தால்தான் வாயையே தொறப்பேன் என்று செயல் படும் சில Corruptive Officials மீது பொறிவைப்பு நடவடிக்கை வேண்டுவோர், அந்தந்த மாவட்ட தலைநகரில் ஒரு டி.எஸ்.பி தலைமையில் செயல் படும் லஞ்ச ஒழிப்பு பிரிவிற்கு நேரில் சென்று விபரம் கூறினால் போதும். பொறி வைத்து முடித்து, அந்த லஞ்ச அதிகாரிகளை கைதுசெய்யும் வரை அவர்களே உடனிருந்து செயல் படுவார்கள்.

பொதுமக்கள் தாங்கள் அவ்வாறு புகார் அளித்தால்,‘நம் அரசு வேலையை முடித்துக்  கொடுக்க மாட்டார்களே என்று கவலைப்பட வேண்டாம்.பொறிவைப்பு நடவடிக்கை 

முடிந்ததும்,அந்த வேலையை செய்து கொடுக்க,லஞ்ச ஒழிப்பு போலீஸாரே உரிய உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு,ஆவன செய்து கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது.

2, மற்றும் 3-வது வகையான லஞ்சம் தொடர்பான குற்றங்களுக்கு, பெரும்பாலும் பொறிவைப்பு நடவடிக்கைகான புகார்கள் வராது. காரணம், இது ஒரு Collusive Corruption. இவற்றை Whistle-Blower கள்தான் வெளிக்கொண்டுவரவேண்டும். இந்த வகையான Collusive Natured Corruption- தொடர்பான குற்றங்களுக்குஎதிராக, FIR போடுவதற்கு அடிப்படையாகத்தேவைப்படுகின்ற Detailed Enquiry/ Preliminary Enquiry/ Surprise Check செய்வதற்கு தேவையான தகவல்கள், லஞ்சப்பணம் transaction நடைபேறும் இடம், Illegal Assets பற்றிய செய்திகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்த தரமற்றஅரசுப்பணிகள் (Sub-standard Works) பற்றிய தகவல்கள், மாமூல் நடைபெறும் விதம், அவை நடைபெறும் இடம் மற்றும் அதில் Colludeஆகியுள்ள Corrupt Officials மற்றும் வாங்கிக் கொடுக்கும் Middle men மற்றும் சமூகவிரோதக் குற்றங்கள் செய்யும் Organised Offenders பற்றிய விபரங்களை, அனுப்புபவர் பெயர் முகவரி எதுவும் குறிப்பிடாமல், புகாராகவோ அல்லது இமெயில் மூலமகவோ,  அனுப்பினால் நிச்சயம் அது உரிய நடவடிக்கை வரும்.

ஆனால், இந்த வகையான வழக்குகளில், வழக்கின் தன்மையைப்பொறுத்துத்தான், கைது போன்ற நடவடிக்கைகள் செய்வார்கள். இதில், பொறிவைப்பு நடவடிக்கை போல உடனடி கைது இல்லாவிட்டாலும், சம்பந்தப்பட்ட லஞ்சப்பேர்வழி காலப்போக்கில் சட்னியாகி விடுவார்.

விஜிலன்ஸ் கமிஷனர் மற்றும் DVAC-முகவரிகள் பொதுமக்கள் பயன் பாட்டுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

1) Vigilance Commissioner

Personnel and Administrative Reforms Department Secretariat, Chennai 600 009 PBX No. 044-25665566

Email: parsec@tn.gov.in

(2)The Director,

Vigilance and Anti-Corruption,

293,MKN Road, Collectors Nagar, Alandur,Chennai,Tamil Nadu-600016.

Phone-044-22321090/22321085/22310989/22342142

E-mail: dvac@nic.in

மத்திய அரசுப் பணியில் உள்ளவர்கள் மீது லஞ்சப்புகார்களை அளிக்கும் பட்சத்தில், மாநில அரசு கட்டுப்பட்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடவடிக்கை எடுக்க முன்வர மாட்டார்கள். அப்புகார்களை கீழே அளிக்கப்பட்டுள்ள CBI-Anti-Corruption பிரிவிற்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்தாலே போதும். அவர்களே உங்கள் இடத்திற்கு, உங்களைத் தேடி வந்து புகாரைப் பெற்று சம்பந்தப்பட்ட Corrupt Officer-மீது பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

CHENNAI ZONE

Joint Director and Head of Zone,

III Floor, E.V.K., Sampath Building, College Road, Chennai 600006.

044-28232756 (Direct), 044-28272358(General), 044-28232755

State of Tamil Nadu, Kerala & Pondicherry.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 29 ஜூலை 2026, புதன்கிழமை

இந்தியா18 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized19 மணி நேரங்கள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா2 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா2 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சிறு தொழில்7 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா6 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

விமர்சனம்6 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா3 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

ஆரோக்கியம்3 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

Translate »
pannello di controllo. Zmy, sid mellowdy & arkadi martinë – the same : a masterclass in collaborative chillhop.