தமிழ்நாடு
முதல்வர், துணை முதல்வரை எதிர்த்து எத்தனை பேர் போட்டி?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எடப்பாடி தொகுதியிலும், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் போடி தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதும் இருவரும் அவரவர் தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்து விட்டனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் போட்டியிடும் தொகுதிகளில் மற்ற வேட்பாளர்கள் எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது. நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் முதல்வர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் சம்பத் குமார் உள்பட 48 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 40 பேருக்கு மேல் சுயேச்சைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடும் போடி தொகுதியில் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் உள்பட 57 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 45 பேருக்கு மேல் சுயேச்சைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் வேட்புமனு வாபஸ் வாங்கும் தேதி 22 ஆம் தேதி வரை இருப்பதால் அதற்குள் ஒரு சிலர் வாபஸ் வாங்குவதற்கு வாய்ப்பு இருப்பதால் 22ஆம் தேதி வெளிவரும் இறுதிப் பட்டியலுக்கு பின்னர்தான் முதல்வர் மற்றும் துணை முதல்வரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை சரியான அளவில் தெரிய வரும்.


















