தமிழ்நாடு
முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்: திமுக சார்பில் யார் யார்?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கிறார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் சில நிமிடங்களுக்கு முன்னால் தொடங்கியது.
ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடி உள்ளது என்பதும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக அனைத்துக் கட்சிகளிடம் கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திமுக சார்பில் ஆர்எஸ் பாரதி மற்றும் கனிமொழி எம்பி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் இவர்கள் இருவரும் ஸ்டெர்லை குறித்த தங்களது கருத்துகளை தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை அரசே ஏற்று நடத்தலாம் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஆலோசனை கொடுத்த நிலையில் அந்த ஆலோசனையை ஏற்றுக் கொள்வது தொடர்பாக தற்போது இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
















