தமிழ்நாடு
அதிமுக தோல்விக்கு எடப்பாடியே காரணம்: விளாசிய அண்ணாமலை!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவு நேற்று வெளியானது இதில் திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு தோல்வியை தழுவினார். அதிமுகவின் இந்த தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என நேரடியாக சொல்லாமல் அவரை சாடியுள்ளார் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை.

#image_title
நேற்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மட்டுமல்லாமல், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகளும் வெளியானது. இந்நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் குறித்து பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஈரோடு தேர்தல் முடிவை தலைவணங்கி ஏற்றுக்கொள்வதாக கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் தோல்வி குறித்து தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஒன்றுசேராததே தோல்விக்கு காரணம். யார் நிற்க வேண்டும்? யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும்? என அதிமுகவில் தேர்தலுக்கு முன்பே பிரச்சனை எழுந்தது. கட்சி சின்னத்தில் நிற்க வேண்டுமா அல்லது சுயேட்சை சின்னத்தில் போட்டியிட வேண்டுமா என்பதில் குழப்பம் நிலவியது. இதை சொன்னதற்காக சிலர் எங்கள் மீது கோபப்பட்டார்கள் என எடப்பாடி பழனிசாமியின் பெயரை நேரடியாக கூறாமல் விமர்சித்தார்.