சினிமா செய்திகள்
சிம்புவின் ‘பீப் பாடல்’ வழக்கு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

சிம்புவின் பீப் பாடல் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதால் திரை உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
நடிகர் சிம்பு கடந்த 2015 ஆம் ஆண்டு தனிப்பட்ட முறையில் கம்போஸ் செய்த ஒரு பாடலில் அச்சில் பதிவு செய்ய முடியாத வார்த்தைகளை கொண்டு பாடி இருந்தர். அந்த பாடல் இணையதளங்களில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பீப் பாடல் என்று கூறப்படும் இந்த பாடலை கம்போஸ் செய்து பாடிய சிம்புவுக்கு மகளிர் அமைப்புகள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர், இதுகுறித்து கோவை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சிம்பு தரப்பில் இருந்து சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனு மீதான விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிம்பு மீதான குற்றச்சாட்டுக்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என கோவை மாஜிஸ்திரேட் விசாரணையில் தெரியவந்துள்ளதை அடுத்து இந்த வழக்கை ரத்து செய்வதாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை சிம்பு ரசிகர்கள் இணையதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.




















