ஆரோக்கியம்
இனி பப்பாளி விதைகளை வீசாதீங்க! வியக்க வைக்கும் நன்மைகள் உங்களுக்கே தெரியுமா?

பப்பாளி விதைகள் – வீணாக்காதீர்கள்! உடல் ஆரோக்கியத்திற்கு அற்புதமான நன்மைகள்!
பப்பாளி பழம் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை வழங்குகிறது என்பதையும் நாம் அறிந்திருப்போம். ஆனால் அதில் உள்ள விதைகளும் பெரும் மருத்துவ குணங்களை கொண்டுள்ளன என்பது பலருக்குத் தெரியாமல் போய்விடுகிறது. பப்பாளி விதைகள் சிறந்த ஊட்டச்சத்து வளமாக திகழ்கின்றன.
இவை புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளது. தினசரி பப்பாளி விதைகளை உணவில் சேர்த்தால் பலவிதமான நோய்களைத் தடுக்கும் இயற்கை மருந்தாக செயல்படும்.
பப்பாளி விதைகளின் முக்கிய நன்மைகள்:
🔹 செரிமானத்தை மேம்படுத்தும்:
பப்பைன் எனும் நொதி பப்பாளி விதைகளில் நிறைந்துள்ளதால், செரிமான சீராக்கும்.
🔹 வயிற்றுப் புழுக்கள் நீக்கம்:
பப்பாளி விதைகள் வயிற்றில் உள்ள புழுக்களை விரட்டும் சக்தி கொண்டவை.
🔹 கல்லீரல் ஆரோக்கியம்:
நச்சு அகற்றும் சக்தி கொண்ட பப்பாளி விதைகள், கல்லீரலை சுத்தமாக வைத்திருக்கும்.
🔹 சிறுநீரக நலன்:
அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சிறுநீரகங்களை பாதுகாக்கும்.
🔹 எடை குறைப்பு:
நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் பசியைக் குறைத்து எடையை கட்டுப்படுத்த உதவும்.
பயன்படுத்தும் முறை:
பப்பாளி விதைகளை நன்கு கழுவி உலர்த்தி, பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியை தினமும் அரை டீஸ்பூன் முதல் 1 டீஸ்பூன் வரை, தண்ணீர் அல்லது ஸ்மூத்தியில் கலந்து குடிக்கலாம்.



















