வணிகம்
தமிழ் புத்தாண்டு பரிசாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? – முதல்வரின் முக்கிய அறிவிப்பு எதிர்பார்ப்பு!

தமிழ் புத்தாண்டு பரிசாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு? – முதல்வரின் முக்கிய அறிவிப்பு எதிர்பார்ப்பு!
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு முக்கியமான சம்பள உயர்வு அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக விரைவில் அறிவிப்பை வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்திலும் கடந்த ஆண்டு அக்டோபரில் 3% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு 55% ஆக உயர்த்திய நிலையில், தமிழக ஊழியர்களும் இதற்கேற்ப அகவிலைப்படி உயர்வு எதிர்பார்த்து உள்ளனர்.
தமிழகத்தில் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் 6 லட்சம் ஓய்வூதியதாரர்கள் இந்த உயர்வினால் பயன் பெறவுள்ளனர். அரசுக்கு எழுத்து மூலமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 2025 ஜனவரி 1 முதல் 2% அகவிலைப்படி உயர்வாக 53%ல் இருந்து 55% ஆக உயர்த்தப்படலாம்.
இந்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளிவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை கொண்டாட்டத்தின் ஒரு பாகமாக அமையலாம்.


