தமிழ்நாடு
மனைவி பத்தி பேசாதீங்க.. அண்ணாமலைக்கு இப்போ புரிஞ்சி இருக்கும்.. விட்டு விளாசும் காயத்ரி

சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலையின் மனைவி படத்தை நெட்டிசன்கள் சிலர் இணையத்தில் பகிர்ந்து டிரெண்டு செய்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஜெயலலிதாவை விட பலமானவர் எனது மனைவி என்று பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். அவரின் பேச்சு அதிமுகவினர் இடையே கொதிப்பை ஏற்படுத்தியது.
என் மனைவி ஜெயலலிதாவை விட 100 மடங்கு, 1000 மடங்கு பவர் புல் நபர் என்று அண்ணாமலை குறிப்புட்டு இருந்தார். இது பெரிய சர்ச்சையாகிய நிலையில், அண்ணாமலையின் மனைவி புகைப்படத்தை இணையத்தில் அதிமுக, திமுகவினர் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதோடு அவரின் மனைவியை கொச்சையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜகவின் முன்னாள் நிர்வாகி காயத்திரி ரகுராம் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். அதில், தனிப்பட்ட தாக்குதல் தவறு.. ஆனால் அண்ணாமலை தனது அம்மாவையும் மனைவியையும் இப்போது தேவையில்லாமல் இங்கு இழுத்து விட்டார். இந்த மாதிரி அடுத்த வீட்டு பெண்களை பேசுறது எவ்ளோ அசிங்கமோ அதே மாதிரி தானே அண்ணாமலை என்னை போன்ற பெண்களை பொது வெளியில் கேவலமாக பேசியது…
3 மாதங்களாக அண்ணாமலையும் அவரது வார்ரூமும் எனது படங்களைப் பயன்படுத்தி என்னைத் தொடர்ந்து தாக்கினர். “உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா” அடையார் வார் ரூம் பெரிய வித்யாசம் எல்லாம் இல்லை.. பொது வாழ்வில் இருக்கும் பெண்களான நாங்கள் இதை அன்றாடம் எதிர்கொள்கிறோம். எல்லோரும் நல்ல பெற்றோருக்குப் பிறந்தவர்கள், அண்ணாமலைக்கு மட்டும் அல்ல. அண்ணாமலையின் மனைவி படத்தை யாரும் பகிர வேண்டாம் யாரும் பற்றி பேச வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அது அரசியல் ரீதியாக சரியல்ல. நன்றி